Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் சாய்ந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 22, 2025 01:34 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த வதியம் பஞ்., குறப்பாளையத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 50 ஆண்டு பழமையான முள் மரம் ஒன்று இருந்தது. தற்பொது பெய்த தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், நேற்று மதியம், 1:00 மணிக்கு, கருர்-திருச்சி நெடுஞ்சாலையில் அந்த முள் மரம் அடியோடு சாய்ந்தது.

இதனால், கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை ஆர்.ஐ., சேகர் மற்றும் குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us