Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பிறப்பு சான்றிழ் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிழ் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிழ் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிழ் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜன 25, 2024 10:36 AM


Google News
கரூர்: 'பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பிறப்பு சான்றிழ் பெற தவறியவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து, 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து ஆண்டுகளுக்கு, 200- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பெயரை பதிவு செய்ய இயலாது.

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, இவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் பிறப்பு சான்று பெற விண்ணப்பிக்கலாம். இனிவரும் காலங்களில் அவகாசம் வழங்கிட இயலாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us