/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் இ.பி.எஸ்., 2 நாட்கள் சுற்றுப்பயணம் கரூர் மாவட்டத்தில் இ.பி.எஸ்., 2 நாட்கள் சுற்றுப்பயணம்
கரூர் மாவட்டத்தில் இ.பி.எஸ்., 2 நாட்கள் சுற்றுப்பயணம்
கரூர் மாவட்டத்தில் இ.பி.எஸ்., 2 நாட்கள் சுற்றுப்பயணம்
கரூர் மாவட்டத்தில் இ.பி.எஸ்., 2 நாட்கள் சுற்றுப்பயணம்
ADDED : செப் 10, 2025 01:25 AM
கரூர், '' கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வரும், 25, 26ல் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்ய வருகிறார்,'' என, மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜய
பாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் தொடர்பாக, சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கேட்டு, மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் நேற்று, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையாவிடம் மனு வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கடந்த இரண்டு மாதங்களாக சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கரூர் மா
வட்டத்தில் வரும், 25 மாலை கரூர் டவுனிலும், 26ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையம், கிருஷ்ண
ராயபுரம் தொகுதி தரகம்பட்டி மற்றும் குளித்தலை தொகுதி தோகை
மலையில் பேசுகிறார். 26ம் தேதி காலை கரூரில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் அமைப்பு நிர்வாகிகள், இ.பி.எஸ்.,ஐ சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அதற்காக வேலாயுதம்பாளையம் பகுதியில், இன்று (நேற்று) அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்தனர். அதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், வரும், 17ல் தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடப்பதால், தி.மு.க.,வினர் முதலில் சுவர் விளம்பரம் செய்து கொள்ளட்டும். பிறகு, அ.தி.மு.க.,வினர் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதனால், அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்வதை நிறுத்தி கொண்டனர். மேலும் வரும், 18 முதல் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வருகைக்காக, அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என, எஸ்.பி.,யிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
மாவட்ட துணை செயலர் ஆலம் தங்கராஜ், வழக்கறிஞர் அணி செயலர் சுப்பிரமணியம், பகுதி செயலர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.