ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, செம்பியநத்தம் பஞ்., சின்னமுத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், 60, விவசாயி மற்றும் தி.மு.க., கவுன்சிலராக உள்ளார்.
இவர் தனது தோட்டத்தில், பம்ப்செட் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தார். கடந்த, 27 காலை, 10:00 மணியளவில் தோட்டத்தில் சென்று பார்த்த-போது, பம்ப் செட் மோட்டாருக்கு பொருத்தப்பட்டிருந்த, 900 மீட்டர் ஒயரை யாரோ சிலர் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, பல இடங்களில் தேடி பார்த்தும். தகவல் கிடைக்காததால், லோகநாதன் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.