/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
மது போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு
ADDED : மே 23, 2025 01:14 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகேயுள்ள, பழனிகவுண்டன்வலசு பகுதியில், மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே குரும்பபட்டியை அடுத்த, சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 60. இவர், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் மது போதையில், வீட்டின் அருகே உள்ள கிணற்று பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் விழுந்தவரை மீட்டனர். ஆனால் மது போதையில் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வேலுசாமி மனைவி வேலம்மாள் கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.