/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம் மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
மண்மங்கலம் அருகே இன்று கல்வி கடன் முகாம்
ADDED : செப் 12, 2025 02:14 AM
கரூர், மண்மங்கலம் அருகே, பண்டுதகாரன் புதுார் தனியார் கல்லுாரியில் கல்வி கடன் முகாம், இன்று நடக்கிறது.
இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன் புதுார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் (தனியார்) கல்லுாரி வளாகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று (12ம் தேதி) காலை 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
வித்யாலஷ்மி போர்டலில் கல்வி கடன் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும். மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை இ.மெயில், வங்கி கணக்கு புத்தகம், வருமான சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லுாரி கல்வி கட்டண பட்டியல் உள்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.