தான்தோன்றிமலையில் இ.கம்யூ., மாநாடு
தான்தோன்றிமலையில் இ.கம்யூ., மாநாடு
தான்தோன்றிமலையில் இ.கம்யூ., மாநாடு
ADDED : மே 27, 2025 01:30 AM
கரூர், தான்தோன்றிமலை ஒன்றிய இ.கம்யூ.,
கட்சியின், 11 வது மாநாடு பாலகிருஷ்ணன், சிவகாமி தலைமையில், புத்தாம்புதுார்
சமுதாயக்கூடத்தில் நடந்தது.
அதில், கரூர் - திண்டுக்கல் சாலை ஆறு சாலை பகுதியில், அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த வேண்டும், புத்தாம்புதுார் சமத்துவபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும், வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், மணவாடி கிராமம் கற்பகா நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், ஜெகதாபி கிராமம் அல்லாலி கவுண்டனுாரில் பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் நாட்ராயன், ஒன்றிய செயலாளர் நடராஜ், துணை செயலாளர் ரமேஷ், அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.