/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இன்று தி.மு.க., முப்பெரும் விழா: கரூரில் போக்குவரத்து மாற்றம் இன்று தி.மு.க., முப்பெரும் விழா: கரூரில் போக்குவரத்து மாற்றம்
இன்று தி.மு.க., முப்பெரும் விழா: கரூரில் போக்குவரத்து மாற்றம்
இன்று தி.மு.க., முப்பெரும் விழா: கரூரில் போக்குவரத்து மாற்றம்
இன்று தி.மு.க., முப்பெரும் விழா: கரூரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 17, 2025 02:08 AM
கரூர் :கரூரில் இன்று, தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதனால், போக்கு
வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின், 117 வது பிறந்த நாளையொட்டி, கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலை, 5:00 மணிக்கு முப்பெரும் விழா நடக்கிறது. அதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதையொட்டி, கரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
* திருச்சியில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மாயனுார் டோல் பிளாசா, உப்பிடமங்கலம் பிரிவு வழியாக உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, பாளையம், சு.வெள்ளோடு, அரவக்
குறிச்சி பைபாஸ் வழியாக செல்ல வேண்டும்.
* திருச்சியில் இருந்து திண்டுக்கல், மதுரை, அரவக்குறிச்சி செல்லும் கனரக வாகனங்கள் மாயனுார் டோல் பிளாசா, உப்பிடமங்கலம் பிரிவு, உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, பாளையம் வழியாக செல்ல வேண்டும்.
* கோவையில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் க.பரமத்தி நால்ரோடு சந்திப்பு வழியாக நொய்யல் குறுக்கு சாலை, நொய்யல் ரவுண்டானா, வேலாயுதம்பாளையம், புகழூர், வாங்கல், மோகனுார் வழியாக செல்ல வேண்டும்.
* ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் நொய்யல் ரவுண்டானா, வேலாயுதம்
பாளையம், புகழூர், வாங்கல், மோகனுார் வழியாக செல்ல வேண்டும்.
* மதுரை, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் அரவக்குறிச்சி, புங்கம்பாடி பிரிவு, ஆர்.வெள்ளோடு, பாளையம், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை வழியாக செல்ல வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.