/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலையில் தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை குளித்தலையில் தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை
குளித்தலையில் தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை
குளித்தலையில் தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை
குளித்தலையில் தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை
ADDED : செப் 10, 2025 02:05 AM
குளித்தலை, குளித்தலையில், நேற்று கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா நடைபெறுவது குறித்து, மண்டல பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.
குளித்தலை சட்டசபை தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலருமான கேசவன், எம்.எல்.ஏ.,க்கள் குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூரில் வரும், 17ல், தி.மு.க., முப்பெரும் விழா நடைபெற உள்ளது. தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் கட்சி மூத்த முன்னோடிகளுக்கு ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணா
நிதி, பாவேந்தர், முதல்வர் விருது
கள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட செயலர் செந்தில் பாலாஜி கூறுகையில்,''கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில், ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தலா, 50,000 பேர் வீதம் கரூர் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்,'' என்றார்.
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.