ADDED : பிப் 24, 2024 03:45 AM
கரூர்: கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநகர மாவட்ட செயலாளர் இளங் கோவன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந் தது.
அதில், வரும் லோக்சபா தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 சதவீதம் ஒப்புகை சீட்டுக்களை எண்ணிய பிறகுதான், தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி (மேற்கு) சக்திவேல் (கிழக்கு) மண்டல செயலாளர் தமிழாதன், மேலிட பொறுப்பாளர் தமிழ்வேந்தன், நகர செயலாளர் முரளி உள்பட, பலர் பங்கேற்றனர்.