/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 16, 2025 01:32 AM
கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் கிளை-2 சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பணப்பயன்களை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அதேபோல், க.பரமத்தி, குளித்தலை ஆகிய பகுதிகளிலும், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.