/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2025 01:49 AM
கரூர், கரூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து ஆணவ படுகொலையை கண்டித்தும், கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், வைரமுத்து குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும், ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் பாலாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் சிவா, குழு உறுப்பினர்கள் மணிகண்டன், அன்பு செல்வம் உள்பட, பலர் பங்கேற்றனர்.