/உள்ளூர் செய்திகள்/கரூர்/கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 01:13 AM
கரூர், கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு திட்ட பயனாளிகள் தேர்வு குறித்தான, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். திட்ட பணியாளர்களின் பட்டியலை இறுதிபடுத்திட, உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், வட்டார துணைத் தலைவர்கள் வினோத் குமார், விஜயலட்சுமி, பொருளாளர் கமலக்கண்ணி உள்பட பலர் பங்கேற்றனர்.