/உள்ளூர் செய்திகள்/கரூர்/ த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு அடுத்தாண்டு தெரியவரும்: விஜய பிரபாகரன் த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு அடுத்தாண்டு தெரியவரும்: விஜய பிரபாகரன்
த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு அடுத்தாண்டு தெரியவரும்: விஜய பிரபாகரன்
த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு அடுத்தாண்டு தெரியவரும்: விஜய பிரபாகரன்
த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு அடுத்தாண்டு தெரியவரும்: விஜய பிரபாகரன்
ADDED : ஜூன் 07, 2025 01:43 AM
அரவக்குறிச்சி, ''த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவு, அடுத்த ஆண்டு ஜன., 9ம் தேதி நடைபெறும் மாநாட்டின் போது தெரியவரும்,'' என, தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் கூறினார்.
கரூர் மாவட்டம், அரவக்
குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டை பகுதியில், தே.மு.தி.க., ஒன்றிய செயலர் சின்னசாமியின் இல்ல திருமண விழாவில், இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். பின்னர், விஜய பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தே.மு.தி.க., வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோஷமாக உள்ளது. தமிழ்நாடு காங்., கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால், தற்போது, தே.மு.தி.க.,வின் வளர்ச்சியை நோக்கி தான் எங்கள் நிலைப்பாடு உள்ளது. த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்த முடிவை, அடுத்த ஆண்டு ஜன., 9ம் தேதி கடலுார் மாவட்டத்தில் நடைபெறும், தே.மு.தி.க., மாநாட்டில் தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.