ADDED : அக் 02, 2025 01:20 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 43, விவசாய கூலி தொழிலாளி. இவரது, 17 வயது மகள் திருச்சியில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களுக்கு தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.


