Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டு சேதம்: பராமரிப்பு தேவை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டு சேதம்: பராமரிப்பு தேவை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டு சேதம்: பராமரிப்பு தேவை

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டு சேதம்: பராமரிப்பு தேவை

ADDED : மே 31, 2025 06:35 AM


Google News
சேந்தமங்கலம்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டுகள் சேதமாகி உள்ளதால்,

சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இந்த மலையை சுற்றி பார்க்கவும், அருவிகளில் குளித்து மகிழவும், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல, 2,200 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகள் வழியாக சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். சில இடங்களில் படிக்கட்டுகள் உடைந்தும், பல இடங்களில் பக்கவாட்டு இரும்பு கைப்பிடி கம்பிகள் பழுதாகியும் உள்ளன.இதனால், அருவியில் குளித்துவிட்டு மீண்டும் மேலே செல்லும் சுற்றுலா பயணிகள், படியில் நடந்து செல்லும்போது ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

மேலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கரடுமுரடான பாறைகள் உள்ளதால், 45 வயதை தாண்டியவர்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது.எனவே, வனத்துறையினர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளை சீரமைத்து, சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் வனத்துறையினர் படிக்கட்டுகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us