/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாலப்பட்டி பிரிவு சாலையில் காவிரி குடிநீர் குழாய் சேதம்பாலப்பட்டி பிரிவு சாலையில் காவிரி குடிநீர் குழாய் சேதம்
பாலப்பட்டி பிரிவு சாலையில் காவிரி குடிநீர் குழாய் சேதம்
பாலப்பட்டி பிரிவு சாலையில் காவிரி குடிநீர் குழாய் சேதம்
பாலப்பட்டி பிரிவு சாலையில் காவிரி குடிநீர் குழாய் சேதம்
ADDED : ஜூலை 10, 2024 06:56 AM
கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி பிரிவு சாலை அருகில், காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையோரம் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலை வழியாக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.
இந்த குழாய் வழியாக செல்லும் தண்ணீர், பல பஞ்சாயத்து கிராமங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் பாலப்பட்டி, மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகில், காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிகமான தண்ணீர் வீணாகிறது. இதனால் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் குறைந்து வருகிறது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடைப்பு ஏற்பட்டுள்ள காவிரி குடிநீர் குழாயை சரி செய்து, தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.