/உள்ளூர் செய்திகள்/கரூர்/நிரம்பிய பெ.ஆ.கோவில் தடுப்பணை வலை விரித்து மீன் பிடிக்கும் மக்கள்நிரம்பிய பெ.ஆ.கோவில் தடுப்பணை வலை விரித்து மீன் பிடிக்கும் மக்கள்
நிரம்பிய பெ.ஆ.கோவில் தடுப்பணை வலை விரித்து மீன் பிடிக்கும் மக்கள்
நிரம்பிய பெ.ஆ.கோவில் தடுப்பணை வலை விரித்து மீன் பிடிக்கும் மக்கள்
நிரம்பிய பெ.ஆ.கோவில் தடுப்பணை வலை விரித்து மீன் பிடிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 29, 2024 01:35 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியுள்ளது. இதனால், தடுப்பணையில், பொதுமக்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, கடந்த, 18 முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்-பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்-கோவில் தடுப்பணை நிரம்பியுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தடுப்பணைக்கு, வினாடிக்கு, 2,189 கன அடி தண்ணீர் வந்தது. தடுப்பணை நிரம்பிய நிலையில், நேற்று பொது-மக்கள் வலை மூலம் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 1,567 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்-டது. அமராவதி அணைக்கு வினாடிக்கு, நேற்று காலை, 2,027 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 88.78 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 136 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,182 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. சாகுபடி பணிக்காக காவிரி-யாற்றில், 1,162 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 10 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.48 அடியாக இருந்-ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது.