/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாலப்பட்டி சாலை அருகில் குடிநீர் குழாயில் விரிசல்பாலப்பட்டி சாலை அருகில் குடிநீர் குழாயில் விரிசல்
பாலப்பட்டி சாலை அருகில் குடிநீர் குழாயில் விரிசல்
பாலப்பட்டி சாலை அருகில் குடிநீர் குழாயில் விரிசல்
பாலப்பட்டி சாலை அருகில் குடிநீர் குழாயில் விரிசல்
ADDED : ஜன 06, 2024 11:57 AM
கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி சாலை அருகில், காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையோர குட்டையில் தேங்கி வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, பஞ்சாயத்துகளுக்கு காவிரி குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு சென்று வினியோகம் நடக்கிறது.
இதில் பாலப்பட்டி, வரகூர், வயலுார், கருப்பத்துார் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு காவிரி நீர் பாலப்பட்டி சாலை வழியாக குடிநீர் குழாய் மூலம் செல்கிறது.
தற்போது பாலப்பட்டி சாலை அருகில் உள்ள, குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு காவிரி நீர் வீணாகி சாலையோரம் உள்ள குட்டையில் தேங்கி வருகிறது. இதனால் குடிநீர் குறைந்தளவு மட்டும் குழாயில் செல்கிறது. ஆகையால் விரிசல் அடைந்த குழாயை சரி செய்ய வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.