/உள்ளூர் செய்திகள்/கரூர்/வாடகை பாக்கி செலுத்தாதோர் விபரங்களுடன் பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கைவாடகை பாக்கி செலுத்தாதோர் விபரங்களுடன் பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கை
வாடகை பாக்கி செலுத்தாதோர் விபரங்களுடன் பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கை
வாடகை பாக்கி செலுத்தாதோர் விபரங்களுடன் பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கை
வாடகை பாக்கி செலுத்தாதோர் விபரங்களுடன் பிளக்ஸ் பேனர் வைத்து மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு, 4.38 கோடி ரூபாய் வாடகை நிலுவை வைத்துள்ளவர்கள் குறித்த விபரத்தை பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் கோவை சாலை, வெங்கடேஷ்வரா சாலையில் இருந்த, 29 கடைகள் பழமை காரணமாக இடிக்கப்பட்டன. தற்போது, அதே இடத்தில் கடைகளை மீண்டும் கட்டி, பழைய உரிமம் தாரர்களுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், 29 கடைகளின் பழைய உரிமம்தாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை வாடகை, அதற்கான வைப்பு தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.வாடகை நிலுவை தொகையை செலுத்தி உரிமையை பெற, தவறும் பட்சத்தில் உரிமம்தாரர் அல்லது அவரது வாரிசுகளிடம் நிலுவை தொகைக்கு இணையான சொத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கரூர் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.அதன்படி, கரூர் பஸ் ஸ்டாண்டில் இடிக்கப் பட்ட, 29 கடைகளின் உரிமம்தாரர்களான கதிர்வேல், சதாசிவம், விஜயலட்சுமி, வேலுச்சாமி, சீதா, காட்சியம்மாள், ஊருடையாள், கருணாநிதி, பழனியம்மாள், வைரமூர்த்தி, செல்லம்மாள், பெருமாள், ராஜரத்தினம், சேக்முகமது, லட்சுமி அம்மாள், ராஜாமணி அம்மாள், மனோகரன், தங்கவேல் ஆகியோரது பெயர்களையும், அவர்களது செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகை, நான்கு கோடியே, 38 லட்சத்து, 23 ஆயி ரத்து, 238 ரூபாய் குறித்த விபரங்களையும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு ள்ளது. இது தொடர்பாக பிளக்ஸ் பேனர், கரூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்டில் வைத்து எச்சரித்துள்ளது.