/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணவியிடம் சில்மிஷம்; கல்லுாரி மாணவன் கைதுமாணவியிடம் சில்மிஷம்; கல்லுாரி மாணவன் கைது
மாணவியிடம் சில்மிஷம்; கல்லுாரி மாணவன் கைது
மாணவியிடம் சில்மிஷம்; கல்லுாரி மாணவன் கைது
மாணவியிடம் சில்மிஷம்; கல்லுாரி மாணவன் கைது
ADDED : ஜூன் 18, 2024 07:23 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, வீரராக்கியம் மேற்கு கோட்டைமேட்டை சேர்ந்த, 20 வயது மாணவி தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகில் உள்ள பால் கம்பெனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர், மாணவியின் கையை தொட்டு இழுத்தனர். மாணவி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். மாணவி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து, 19 வயது கல்லுாரி மாணவரை கைது செய்தனர். பெயர் தெரியாத மற்றொருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.