/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் சோதனைஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ஆங்கில புத்தாண்டையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் சோதனை
ADDED : ஜன 01, 2024 11:41 AM
கரூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும், இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கரூர் மாவட்டம் முழுவதும், 1,000 போலீசார், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில், சர்ச் ஆகியவற்றின் முன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழக ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.எஸ்.ஐ., சண்முகம் தலைமையில், போலீசார் நேற்று, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும், ஐந்து பிளாட்பாரங்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.