/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி கிருஷ்ணராயபுரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி
ADDED : ஜூன் 21, 2025 01:07 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், வேப்பங்குடி, தேசிய மங்களம், சிவாயம், கோடங்கிப்பட்டி, வயலுார், பாம்பன்பட்டி, திருமேனியூர், கணக்கம்பட்டி, சிந்தலவாடி உள்பட பல்வேறு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டது. குச்சிகள் பசுமையாக வளர்ந்து களைகள் அகற்றப்பட்டது.
தற்போது செடிகளில் கிழங்குகள் பிடித்து வருகிறது. மழை காலத்தில், மேலும் செடிகளில் கிழங்குகள் நன்கு வளர்ச்சி பெறும். இந்த பகுதியில் விவசாயிகள், 70 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். குறைந்த தண்ணீர் மட்டுமே பாய்ச்சப்படுகிறது. இதனால் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.


