/உள்ளூர் செய்திகள்/கரூர்/போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவுபோலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
போலி அரசு ஆவணம் மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 07:46 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, வீரராக்கியாம் பஞ்., நடரா-ஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி செல்வக்கனி, 51, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் லோகநாதனுக்கு, பொதுப்பணி துறையில் வேலை வாங்கி தருவ-தாக, 2017 நவ., 6ல் மணவாசி பஞ்., ஆர்.புதுக்-கோட்டையை சேர்ந்த சக்திவேல், 56, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சந்திரசேகர், 55, கரூர் அரசு காலனி குமார் ஆகியோர், 14 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள், போலியான அரசு பணி ஆணை தயாரித்து கொடுத்துள்ளனர். ஏமாற்றப்-பட்டதையடுத்து, பணத்தை திருப்பி கேட்டதற்கு மூவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட செல்வக்கனி, கரூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.