/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலை மறியலில் ஈடுபட்டதாக மா.கம்யூ., செயலாளர் மீது வழக்கு சாலை மறியலில் ஈடுபட்டதாக மா.கம்யூ., செயலாளர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்டதாக மா.கம்யூ., செயலாளர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்டதாக மா.கம்யூ., செயலாளர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்டதாக மா.கம்யூ., செயலாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 16, 2025 07:42 AM
கரூர்: கரூர் அருகே, இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., செயலாளர் உள்பட, பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், காதப்பாறை வெண்ணைமலை பகுதியை சேர்ந்த முருகராஜ் மனைவி காவியா, 26; இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 13ல் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் காவியா சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றும் கரூர் மாநகர மா.கம்யூ., செயலாளர் தண்டபாணி உள்பட, பலர் திருச்சி சாலை காந்தி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி கொடுத்த புகார்படி, சட்ட விரோதமாக கூடி, சாலை மறியலில் ஈடுபட்டதாக கரூர் மாநகர மா.கம்யூ., செயலாளர் தண்டபாணி, 50, ராஜ்குமார், 28, மணிகண்டன், 26, மணிராஜ், 48, பிரவீன், 25, உள்பட, 15 பேர் மீது தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.