/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
துக்க நிகழ்வில் தகராறு தாக்கியவர் மீது வழக்கு
ADDED : டிச 01, 2025 02:30 AM
குளித்தலை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்த கீரிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 28; டூவீலர் மெக்கானிக். இவரது உறவின-ரான, வடக்கு, கல்லுப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்-பவர், கடந்த, 26ல் இறந்துவிட்டார்.
அவரது துக்க நிகழ்வுக்காக, தேவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் நிஷாந்த், 19, நாகராஜன், 20, ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள்கவுண்டம்பட்-டியை சேர்ந்த கந்த
சாமி என்பவர், முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தையில் பேசி, கத்தியால் கீரியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். பாதிக்கப்பட்ட தேவராஜ், நிஷாந்த், நாகராஜ் ஆகிய மூவரும், தோகைமலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கந்தசாமி மீது வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.


