ADDED : ஜூன் 14, 2025 07:39 AM
குளித்தலை: அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட, கட்டட இன்ஜினியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் காலை அரசு அனுமதி இல்லாமல், உள்ளே நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்,
அரசு பணிக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய கட்டட இன்ஜினியர்கள் சரவணன், 35, ஜெ ஸ்ரீதர், 34, சுப்பிரமணி, 58, திருநாவுக்கரசு, 28, மற்றும் எட்டு பேர் மீது, நகராட்சி கமிஷனர் நந்தகுமார் புகார் கொடுத்தார். இதன்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.