/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் அறை மூடல்: பயணிகள் கடும் அவதிரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் அறை மூடல்: பயணிகள் கடும் அவதி
ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் அறை மூடல்: பயணிகள் கடும் அவதி
ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் அறை மூடல்: பயணிகள் கடும் அவதி
ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் அறை மூடல்: பயணிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 19, 2024 06:40 AM
கரூர் : கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டு களாக செயல்பட்டு வந்த, கேன்டீன் அறை மூடப்பட்டதால், பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்படுகின் றனர்.தென் மாவட்டங்களின், நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.
திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள், பல்வேறு பணிகள் காரணமாக, கரூருக்கு ரயிலில் வந்து செல்கின்றனர்.பயணிகள் வசதிக்காக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீன் வசதி மற்றும் அமர்ந்து சாப்பிட வசதியாக தனியாக அறையும் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், கேன்டீன் அறையை வணிக பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மூடி விட்டனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், கேன்டீனில் உணவு பொருட்களை வாங்கும் பயணிகள் அமர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, முதியவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டே சாப்பிடுகின்றனர்.பயணிகள் நலன் கருதி, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் மூடப்பட்ட, கேன்டீன் அறையை திறக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.