/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி கரூரில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
கரூரில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
கரூரில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
கரூரில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
ADDED : மே 21, 2025 01:18 AM
கரூர் :பாகிஸ்தானுக்கு எதிரான போரில், சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, கரூர் ஜவகர் பஜாரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகிலிருந்து, பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஏந்தி வெற்றி பேரணி நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். காஷ்மீர் பஹல்காம் பகுதியில், அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாகவும், தங்கள் குங்குமத்தை இழந்த நமது தேசத்தின் சகோதரிகளுக்கு நீதி கேட்கும் வகையிலும் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தது ராணுவம்.
பயங்கரவாதிகளை பத்திரமாக காத்து வந்த, பாகிஸ்தான் மீது நமது ராணுவம் நடத்திய தாக்குதலில், 9 பயங்கரவாத முகாம்களும், 11 ஏவுதளங்களும் துல்லியமாக அழிக்கப்பட்டன. நமது இந்திய முப்படைகளின் இந்த மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில், மூவர்ணக்கொடி ஏந்திய யாத்திரை நடத்தப்பட்டது. இந்த பேரணி நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ் சிலை அருகே தொடங்கி, ஜவகர் பஜார் வழியாக கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானாவில் முடிவடைந்தது.
பேரணியில் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மகளிர் அணி மாநில துணைத் தலைவி மீனா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் குணசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.