/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாரதியார், இமானுவேல் சேகரன் கரூரில் நினைவு நாள் நிகழ்ச்சி பாரதியார், இமானுவேல் சேகரன் கரூரில் நினைவு நாள் நிகழ்ச்சி
பாரதியார், இமானுவேல் சேகரன் கரூரில் நினைவு நாள் நிகழ்ச்சி
பாரதியார், இமானுவேல் சேகரன் கரூரில் நினைவு நாள் நிகழ்ச்சி
பாரதியார், இமானுவேல் சேகரன் கரூரில் நினைவு நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 12, 2025 01:23 AM
கரூர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி, கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். அங்கு பாரதியார், இமானுவேல் சேகரன் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலர்கள் முருகேசன், வெங்கடாசலம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், அவரது படத்திற்கு மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகே, புதிய தமிழகம் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாவட்ட செயலர் அசோகன் மற்றும் அ.தி.மு.க., மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
* குளித்தலை பஸ் ஸ்டாண்டில் காந்திசிலை முன், சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அரவிந்தன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் மணத்தட்டை, சுங்ககேட், பெரியபாலம், மேட்டுமருதுாரில் மலர் துாவி
அஞ்சலி செலுத்தினர்.