ADDED : ஜூன் 02, 2025 03:50 AM
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில் பகவதியம்மன் கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., மகிளிப்பட்டி கிராமத்தில் பகவதியம்மன், கோட்டை கருப்பண்ணன் சுவாமி கோவில் உள்ளது. கோவில் திருவிழா முன்னிட்டு பகவதியம்மன் மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோட்டை கருப்பண்ணன் சுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மகிளிப்பட்டி, உடையகுளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.