/உள்ளூர் செய்திகள்/கரூர்/வங்கி கடன் அளித்து உதவ வேண்டும்: நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் மனுவங்கி கடன் அளித்து உதவ வேண்டும்: நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் மனு
வங்கி கடன் அளித்து உதவ வேண்டும்: நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் மனு
வங்கி கடன் அளித்து உதவ வேண்டும்: நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் மனு
வங்கி கடன் அளித்து உதவ வேண்டும்: நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் மனு
ADDED : பிப் 06, 2024 11:07 AM
கரூர்: வங்கி கடன் அளித்து உதவ முன்வர வேண்டும் என, நரிக்குறவர் பாசி மணி மாலை கைவினை பொருட்கள் முன்னேற்ற சங்க செயலாளர் விஜயகுமார் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், காதப்பறை பஞ்சாயத்துக்குப்பட்ட வேட்காரன்புதுாரில் உள்ள நரிக்குறவர் காலனியில் பலர் வசிக்கின்றனர். அரசு வங்கியில், (ஐ.ஓ.பி.,), எஸ்.டி.,பிரிவுக்கான மானியத்துடன் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். எங்கள் விண்ணப்பித்தை ஏற்க மறுத்து விட்டனர். கடந்த மூன்று மாதங்களாக கடன் கேட்டு அலைந்து வருகிறோம். இதனால், மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு, கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.