மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 15, 2024 01:02 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிழக்கு தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 9:00 மணியளவில் பொது மக்கள், பக்தர்கள் மருதுார் காவிரி ஆற்றில் பால்குடம், தீர்த்தக்-குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, தீர்த்தத்தை சுவாமிக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதேபோல், நங்கவரம் டவுன் பஞ்., தமிழ்ச்சோலையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொது மக்கள், பக்-தர்கள் பனையூர் உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்காலில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்-றனர். இதையடுத்து, சுவாமிக்கு பால், தீர்த்த அபிஷேகம் நடத்தி, ஆராதனை காட்டப்பட்டது. பகதர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.