/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்; மூவர் கைது பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்; மூவர் கைது
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்; மூவர் கைது
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்; மூவர் கைது
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்; மூவர் கைது
ADDED : ஜூலை 05, 2025 01:41 AM
குளித்தலை, திருச்சி மாவட்டம், எஸ்.புதுக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் தீபன்ராஜ், 27, பேக்கரி கடையில் டீ மாஸ்டராக பணிபுரிகிறார். இவர், பொய்யாமணியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:45 மணியளவில் திருச்சி மாவட்டம், பழையூர் கிராமத்தை சேர்ந்த விஜய், 30, டிரைவர் பிரபாகரன், 28. பெயின்டர் சேகர், 38, ஆகியோர் பேக்கரி வந்தனர்.
ஏற்கனவே, கடை உரிமையாளர் அரவிந்திற்கும், விஜய்க்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இது சம்பந்தமாக கடையில் இருந்த டீ மாஸ்டர் தீபன்ராஜிடம் எங்கே உங்க முதலாளி என்று கேட்டனர். அப்போது அவர், 'மொபைல்போன் இங்கு உள்ளது. அவர் எங்கே சென்றார்' என தெரியவில்லை என்றார். இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து தகாத வார்த்தை பேசி, கடையில் இருந்த சேரை எடுத்து மாஸ்டர் தலையில் அடித்து விட்டு சென்றனர். பாதிக்கப்பட டீ மாஸ்டர் தீபன்ராஜ், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.