/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அக்.,10க்குள் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம் அக்.,10க்குள் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்
அக்.,10க்குள் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்
அக்.,10க்குள் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்
அக்.,10க்குள் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 18, 2025 01:53 AM
கரூர் :தற்காலிக பட்டாசு கடை அமைக்க அக்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க, தற்காலிக உரிமம் பெற அக்.,10ம் தேதிக்குள் இணையதளம் மற்றும் இ.சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடை அமையவுள்ள இடத்தை, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யப்படும் கடைகளில் மேல் மாடி இருக்கக் கூடாது. பட்டாசு கடையின் அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், கட்டடங்கள் ஆகியவை இருத்தல் கூடாது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள், தற்போதைய விண்ணப்பத்துடன் முன்னர் பெற்ற உரிம நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.