Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: கரூர் காங்., - எம்.பி., குற்றச்சாட்டு

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: கரூர் காங்., - எம்.பி., குற்றச்சாட்டு

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: கரூர் காங்., - எம்.பி., குற்றச்சாட்டு

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: கரூர் காங்., - எம்.பி., குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 11, 2024 04:20 AM


Google News
கரூர்: ''பா.ஜ., மாநில தலைவர் அண்ணா மலைக்கு அரசியல் நாகரி-கமும், முதிர்ச்சியும் கிடையாது,'' என, கரூர், காங்., -- எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற கரூர், காங்., -- எம்.பி., ஜோதிமணி, நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, முதிர்ச்சியோ கிடையாது. தமி-ழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட எல்லோர் மீதும், சேற்றை வாரி இறைப்பது அவருடைய அரசியலாகும். யாத்திரை என்று ஒன்று நடத்தி, மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளார். லுலு மால் நிறுவனத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பின் அமைதி காப்பது ஏன். இடையில் கமிஷன் பெற்று விட்டாரா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது. அவர் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது, 300 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கைது செய்யப்படுவோம் என உணர்ந்து, ஒரு மாதமாக தலைமறைவாக உள்ளார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் உள்ள குற்-றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு, தமிழக கவர்னர் அனுமதி அளித்-துள்ளார். ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஒரு வழக்குக்கு மட்டும், கவர்னர் ரவி கையெழுத்து போடவில்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தான் என, நான் பல தடவை குற்றம்-சாட்டி உள்ளேன். இந்த மாதிரி ஒரு ஊழல் கூட்டணி தான், அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us