/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
ப.வேலுார்: ஆனி திருமஞ்சனத்தையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று நடராஜருக்கு அபி-ஷேகம் நடந்தது.காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மதியம், 12:00 மணி வரை தேவாரம், திருவாசகத்துடன், 16 வகையான திரவியங்களால் அபி-ஷேகம் நடந்தது.
மதியம், 1:00 மணிக்கு சிவகாமி அம்பாள் தங்க கவசத்திலும், நடராஜ பெருமான் வெள்ளி கவசத்திலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடம் நிர்வாகி ராமலிங்கம் மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.