/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆர்.டி. மலையில் அங்கன்வாடி மையம் திறப்பு ஆர்.டி. மலையில் அங்கன்வாடி மையம் திறப்பு
ஆர்.டி. மலையில் அங்கன்வாடி மையம் திறப்பு
ஆர்.டி. மலையில் அங்கன்வாடி மையம் திறப்பு
ஆர்.டி. மலையில் அங்கன்வாடி மையம் திறப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:17 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில், 100 நாள் திட்டத்தின் கீழ், ரூ. 11 லட்சத்து, 97 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் நாவல் நாயக்கன் பட்டியில் ஒன்றிய பொது நிதியின் கீழ், ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். முன்னாள் தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதிய அங்கன்வாடி மைய கட்டடம், பயணிகள் நிழற்கூடத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார்.
இதேபோல், வடசேரி பஞ்., கார்ணாம்பட்டியில் மக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி விழா நடந்தது.