ADDED : ஜூன் 30, 2024 02:01 AM
கரூர்,அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.டி.யு.,) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இரணியப்பன், சிம்பு தேவன் உள்ளிட்ட தொழிலாளர்கள் மீது, கொலை வெறி தாக்குதல் நடத்திய நிறுவனத்தினர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.