ADDED : ஜூன் 21, 2025 01:05 AM
கரூர், கரூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்களின் கண்காட்சி நேற்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
கண்காட்சியை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதில், பல வகை கதிரடிக்கும் இயந்திரம், தென்னை மட்டையை துாளாக்கும் இயந்திரம், மருந்து தெளிக்கும் ட்ரோன்கள் இடம் பெற்றிருந்தது. கண்காட்சியில், பொறியியல் துறை சார்பில் கரூர் வேளாண்மை கல்லுாரி மாணவ, மாணவியருக்கு வேளாண் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து, செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
கண்காட்சியில், வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம், பொறியியல் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர்கள் ராஜ்மோகன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


