/உள்ளூர் செய்திகள்/கரூர்/'சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்''சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'
'சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'
'சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'
'சட்டசபைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்'
ADDED : ஜன 31, 2024 03:32 PM
கரூர் : '' தமிழக சட்டசபைக்கு எப்போது, தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி சார்பில், செயலாளர் சரவணன் தலைமை யில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியம் திட்டம் அமல் உள்ளிட்ட, 500 க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை, தி.மு.க., அறிவித்து, 3 சதவீதம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தற்போது, நீட் தேர்வை, தி.மு.க., அரசால் ரத்து செய்ய முடியவில்லை. நீட் தேர்வு ரத்துக்காக வாங்கிய கையழுத்து பிரதிகள், சேலம் மாநாட்டில் கிடந்தது. பழைய ஓய்வூதியம் கேட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட தொடங்கி உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டதால், தமிழக மக்களும், தி.மு.க., அரசு மீது வெறுப்பில் உள்ளனர். இதனால், தமிழக சட்டசபைக்கு எப்போது, தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராக வருவார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஸ்பெயின் நாட்டில், பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக செய்திகள் வருகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்று இருப்பது வேடிக்கையாக உள்ளது.கடந்த எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்று சென்ற ஜோதிமணி, ஆறு மாதங்களாக தொகுதியில் உலா வருகிறார். எதிர்ப்புகள் வருவதை தடுக்க, 100 நாள் வேலை திட்ட பணி யாளர்களை சந்திக்கிறார். பள்ளிகளில் மாண வர்களை சந்தித்து பேசுகிறார். அவரை, தொகுதி மக்கள் புரிந்து கொண்டு, வரும் லோக்சபா தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, முன்னாள் எம்.பி., சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பாசறை செயலாளர் கமலகண்ணன், இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், மாணவர் அணி இணை செயலாளர் விசாகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.