/உள்ளூர் செய்திகள்/கரூர்/அதிகாரிகளுடன் அ.தி.மு.க., வாக்குவாதம ்அதிகாரிகளுடன் அ.தி.மு.க., வாக்குவாதம ்
அதிகாரிகளுடன் அ.தி.மு.க., வாக்குவாதம ்
அதிகாரிகளுடன் அ.தி.மு.க., வாக்குவாதம ்
அதிகாரிகளுடன் அ.தி.மு.க., வாக்குவாதம ்
ADDED : பிப் 25, 2024 03:48 AM
கரூர்: கரூர் அருகே, மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக, அ.தி.மு.க.,வினருக்கும், பஞ்., யூனியன் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் சார்பில், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து, ராஜிவ் காந்தி நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சாந்திக்கு தெரியாமல், பணிகள் நடப்பதாக கூறி மாவட்ட கவுன்சிலர் திருவிகா, பஞ்சாயத்து தலைவர் சாந்தி, 2 வது வார்டு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்தும்படி தெரிவித்தனர். பணிகள் தொடங்கியதால், யூனியன் பி.டி.ஓ., வினோத்குமார், பொறியாளர் தமீன் அன்சாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு இரு தரப்பினர் இடையே, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பான பிரச்னையை, கலெக்டரிடம் கொண்டு சென்று, பேசி சரி செய்து கொள்ளலாம். அதுவரை, இரு தரப்பினரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்கவும் என, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, மாவட்ட கவுன்சிலர் திருவிகா கூறியதாவது:
தான்தோன்றிமலை பஞ்., யூனியன் சார்பில், பஞ்சாயத்து தலைவர் சாந்திக்கு தெரியாமல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கினர். தகவல் தெரிந்ததும் நானும், பஞ்சாயத்து தலைவர் சாந்தியும் சம்பவ இடத்துக்கு வந்தோம். மழைநீர் வடிகால் பணியை, கிழக்கு பஞ்சாயத்து சார்பில் செய்ய உள்ளதாக தெரிவித்தோம். ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டு கொண்டதன் பேரில், கலெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்த பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். பஞ்., தலைவர் சாந்தி தொடங்கிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, நிறுத்திய பி.டி.ஓ., உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மீது, போலீசில் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
* கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரின், சொந்த பஞ்சாயத்துதான், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து. மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்திதான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இதனால், பஞ்சாயத்து தலைவருக்கு தெரியாமல், மழைநீர் வடிகால் பணிகளை எப்படி செய்யலாம் என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு வந்து, பஞ்., யூனியன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.