Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவை எட்டியது; மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து சரிவு

ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவை எட்டியது; மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து சரிவு

ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவை எட்டியது; மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து சரிவு

ஆத்துப்பாளையம் அணை முழு கொள்ளளவை எட்டியது; மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து சரிவு

ADDED : ஜூலை 04, 2025 01:16 AM


Google News
கரூர், மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுப-டிக்காக கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின், கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின.

அணைகளில் இருந்து உபரி

நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால், உபரி நீர் முழுவதும் திறக்கப்பட்டு வந்தது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 47 ஆயிரத்து, 603 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 26 ஆயி-ரத்து, 902 கன அடியாக குறைந்தது. அதில், 26 ஆயிரத்து, 82 கன அடி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரி-யாற்றில் திறக்கப்பட்டது.

தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ண-ராயபுரம் பாசன வாய்க்காலில், 820 கன அடி தண்ணீர் திறக்கப்-பட்டது.

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு, 95 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர்

திறக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us