ADDED : ஜன 31, 2024 03:32 PM
கரூர் : கடும் பனி பொழிவால், எலுமிச்சை பழம் விலை குறைந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம் பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நா டகா மாநிலம் பிஜப்பூர், ஆந்திரா மாநிலங் களில் இருந்து, கரூர் மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு, கொண்டு வரப்படுகிறது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 50 கிலோ கொண்ட, ஒரு மூடை, 4,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 கிலோ கொண்ட, ஒரு மூடை, 3,000 ரூபாய் முதல், 3,200 ரூபாய் வரை மட்டும் விற்பனையாகிறது.