/உள்ளூர் செய்திகள்/கரூர்/டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 6,082 பேர் ஆப்சென்ட்டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 6,082 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 6,082 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 6,082 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 6,082 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூன் 10, 2024 01:51 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 6,082 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குருப்-4 தேர்வு மையங்களை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, 99 மையங்களில் நடந்தது. அதில், 26,869 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 20,787 பேர் தேர்வு எழுதினர். 6,082 பேர் தேர்வு எழுத வரவில்லை. 58 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்
பட்டனர்.
தேர்வு எழுத உதவி தேவைப்படக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக, 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. தேர்வை
கண்காணிக்க, 7 கண்காணிப்பு குழுக்கள், 16 பறக்கும் படை,
99 ஆய்வு அலுவலர்கள், 99 தலைமை கண்காணிப்பாளர், தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்ய, 104 வீடியோ கிராபர்கள், பாதுகாப்பு பணியில், 131 போலீசார் பணியில்
இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.