/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாய் கடித்து 3 ஆடுகள் பலி அரவக்குறிச்சி, செப். 12 நாய் கடித்து 3 ஆடுகள் பலி அரவக்குறிச்சி, செப். 12
நாய் கடித்து 3 ஆடுகள் பலி அரவக்குறிச்சி, செப். 12
நாய் கடித்து 3 ஆடுகள் பலி அரவக்குறிச்சி, செப். 12
நாய் கடித்து 3 ஆடுகள் பலி அரவக்குறிச்சி, செப். 12
ADDED : செப் 12, 2025 01:25 AM
பள்ளப்பட்டியில், வெறி நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலியாகின.
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில், வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தெரு நாய்கள் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடுகளைக் கடிப்பது, சிறுவர் சிறுமியரை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில், யாசர் அன்சாரி என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதிறியதால் உயிரிழந்துள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.