/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
குளித்தலை அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 08, 2025 12:57 AM
குளித்தலை, 'குளித்தலை அரசு கலை கல்லுாரியில், அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது' என, கல்லுாரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப்படி, 2025-26ம் கல்வியாண்டிற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், இளங்கலை பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பி.காம்.,-பி.பி.ஏ.,-பி.காம்.,(சி.ஏ) மற்றும் பி.ஏ., வரலாறு, பி.காம்., தமிழ் வழி, பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் போன்ற பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.