/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம ்கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம ்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம ்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம ்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம ்
ADDED : பிப் 24, 2024 03:47 AM
கரூர்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில், விதித்திருந்த ஆணையை வெளியிட வேண்டும். வரும் எம்.பி., தேர்தல் பணிகளை மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்றனர்.