/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி
ADDED : மே 24, 2025 02:09 AM
கரூர் கரூர் மாவட்டத்தில் நேற்று, இரண்டாவது நாளாக ஜமாபந்தி நடந்தது.
கரூர் மாவட்டத்தில் புகழூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் ஆகிய, ஏழு தாலுக்காவை சேர்ந்த, வருவாய் கிராமங்களுக்கு, ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இரண்டாவது நாளாக, மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தாசில்தார் மோகன்ராஜ் உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதேபோல், கரூர் தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையாளர் கருணாகரன் தலைமையில், ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அப்போது, கரூர் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.