/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவிக்கு தொல்லை முதல்வருக்கு 23 ஆண்டு மாணவிக்கு தொல்லை முதல்வருக்கு 23 ஆண்டு
மாணவிக்கு தொல்லை முதல்வருக்கு 23 ஆண்டு
மாணவிக்கு தொல்லை முதல்வருக்கு 23 ஆண்டு
மாணவிக்கு தொல்லை முதல்வருக்கு 23 ஆண்டு
ADDED : ஜூன் 14, 2025 06:39 AM

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார், 53. இவர், குளித்தலையில் சண்முகா நர்சிங் கல்லுாரியை நடத்தி வந்தார். கல்லுாரியில் படித்து வந்த, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு 2022ல் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவி புகாரின்படி, குளித்தலை மகளிர் போலீசார் செந்தில்குமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. செந்தில் குமாருக்கு, 23 ஆண்டுகள் சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 7 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.